JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அனுராதபுரம் வீதியின் தற்காலிக பாலம் சேதம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 9ஆம் மைல் கல் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் 


கடந்த ஆண்டு ஏற்பட்ட'டித்வா' சூறாவளியின் போது இந்தப் பாலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிக்கப்பட்டது அதன் காரணமாக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது எனினும் அந்த பாலம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் போக்குவரத்து பொலிஸார் இது விடயம் புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال