JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் இடம்பெற்ற "பசுமை எனும் பேரபாயம்" - நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்.

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், 'PILLARS' அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி, புத்தளத்தில் அமைந்துள்ள ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில், கடந்த 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி தொடக்கம் 6.45 மணி வரை இடம்பெற்றது. 


புத்தளம் வலய முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை) இஸட். ஏ. ஸன்ஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸட் ஏ. எம். ரஸ்மி, நூலாசிரியர் அறிமுகத்தினை வழங்கியிருந்தார். நூல் விமர்சன உரைகளை கொழும்பு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் இழப்பீட்டுக்கான அலுவலக ஆணையாளருமாகிய நஸீஹா ஹிஸ்மி மற்றும்  புத்தளம் மாவட்டச் செயலக புள்ளிவிபரக்கிளையின் மாவட்டப் பிரதிப்பணிப்பாளரகிய எஸ். தனபாலசிங்கம்  ஆகியோர் வழங்கியிருந்தனர்.


PILLARS அமைப்பின் செயலாளர் ரினாஸ் முஹம்மத்  நன்றியுரையினை நிகழ்த்தினார். நிகழ்ச்சித் தொகுப்பினை, இலங்கை தேசிய நீருயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வள வளர்ப்பு நிபுணர் ஏ. அர்ஷத் அலி  வழங்கினார்.


நூல் அறிமுகத்தினைத் தொடர்ந்து PILLARS அமைப்பின் இப்தார் நிகழ்வுகளும் இடம்பெற்றன.


இந்நிகழ்வில் மதகுருமார்கள், சூழலியலாளர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள் , பொதுமக்கள்  எனப்பலரும்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - எழுநா










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال