JobVibe.lk - Sri Lanka Job Portal

கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 06 கிலோ தங்கத்தை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் திங்கட்கிழமை (09) இலங்கை கடற்படை கடலோர காவல்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சுமார் ஆறு (06) கிலோ எண்ணூற்று அறுபத்தைந்து (865) கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன. 


மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 41 மற்றும் 49 வயதுடைய யாழ்ப்பாணம், மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் குறித்த சந்தேக நபர்கள், தங்கப் பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال