மாவட்ட மதத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்.
புத்தளம் எம். யூ. எம். சனூன்
புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நல்லிணக்கம், ஒருங்கிணைப்பு செயல்முறை குறித்து மாவட்ட மதத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (09) காலை புத்தகம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள நுஹுமான் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
இலங்கை சமாதான பேரவை, புத்தளம் டி.ஐ.ஆர்.சி. நிறுவனம், ஒடெப்ட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
புத்தளம் மாநகர சபையின் தலைவர் பொறியியலார் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட சமய தலைவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்நிகழ்வின் பிரதான வளவாளராக கொழும்பு தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்திலிருந்து (ONUR) ஆளுனர் சபை உறுப்பினர் சுஜித் அபேவிக்ரம கலந்து கொண்டார்.












No comments