Breaking News

மதுரங்குளியில் நடைபெற்ற பிரமாண்டமான இப்தார் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

மதுரங்குளி வர்த்தக சங்கம், மதுரங்குளி ஏற்றுமதியாளர்கள்  சங்கம் மற்றும்  மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித் ஆகியன இணைந்து நடாத்திய சிறப்பு இப்தார் நிகழ்வு திங்கட்கிழமை (09) மாலை மதுரங்குளி பிரதான வீதியில் உள்ள மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.


மதுரங்குளி நகரில் சாந்தி, சமாதானம், இன ஒற்றுமை,  சகவாழ்வு, சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான நடாத்தப்பட்ட வெற்றிகரமான நிகழ்வு இதுவாகும். 


மதுரங்குளி ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எம்.எஸ்.எம். நிஸ்தார், செயலாளர் ஏ. ஆர். எம். ரபாத் அமீன் ஆகியோரின் அனுசரணையுடன், மதுரங்குளி வர்த்தக தலைவர் சங்க தலைவர் எம்.எஸ்.டி.அமான் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இந்த இப்தார் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜே. எம். பைஸல், என்.டி.எம். தாஹிர், புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் சதுரக ஜயசிங்க , புத்தளம் மாவட்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன,  , முந்தல் பிரதேச  செயலாளர் இமேஷா பெரேரா, மேலதிக முந்தல் பிரதேச செயலாளர்  சாலிய பண்டார, புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச சபை தலைவர் ரதிக சஞ்சீவ மற்றும் பிரதேச சபை சபையின் உறுப்பினர்கள், நீர்வழங்கல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல்,  தொழிலதிபர்களான அல் ஹாஜ் என்.எம்.சித்தீக், மொஹிதீன் பிச்சை,  எஸ்.டி.ஏ. நிஸ்தார், முன்னாள் மாகாண  உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ஹாரூன், கே.எம்.எம். பைசர் மரிக்கார், முன்னாள்  கனமூலை பெரிய பள்ளி தலைவர் எச்.எச்.எம்.நஜீம்,  இளம் பௌத்த சங்கத் தலைவர் சன்ன ரத்நாயக்க,  மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, டி.கே.எஸ். தஹாநாயக்க மற்றும் ஏனைய  அதிகாரிகள், முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் எம்.எம்.மிஹ்லார், ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் எச்.அஜ்மல், எம்.எஸ்.எம்.சஹீர், மேர்ஸி கல்வி நிலைய பணிப்பாளர் பௌசுல் ரஹ்மான், அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.முனாஸ், மதுரக்குளி வர்த்தக சங்க செயலாளர் மொஹமட் நிஜாம், கே.துரைசிங்கம் மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், மதத் தலைவர்கள்,  மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தக தொழிலதிபர்களுடன் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





































No comments