JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வை.எம். என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் வை.எம். டுவர்ஸ் அன்ட் ட்ராவல்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வை.எம். என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் வை.எம். டுவர்ஸ் அன்ட் ட்ராவல்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) மாலை புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கின்ற கிரேன்ட் மல்ஹாஸ் மண்டபத்தில்  இடம்பெற்றது. 


வை.எம்.நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ். எம். யாசிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை அவரது புதல்வர் முஹம்மது அம்மார் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார். 


உலமாக்கள், தொழிலதிபர்கள், கல்வியலாளர்கள், புத்தளம் 80ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ் அங்கத்தவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்விலே வரவேற்புரையை நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம்.யாசிர் நிகழ்த்தியதோடு விசேட உரையினை, புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும், 80ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ் ஆலோசகருமான அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸாலாஹி  நிகழ்த்தினார்.


வை.எம்.நிறுவனத்தில் கடமையாற்றும் எம்.என்.எம்.அஸ்னி நிகழ்வை சுவைபட தொகுத்து வழங்கினார்.



























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال