JobVibe.lk - Sri Lanka Job Portal

சில இந்திய ஊடகங்களின் புளுகு மூட்டை

இந்திய எண்ணைக் கப்பல் சவூதி அரேபியாவிலிருந்து ஈரானிய தடைகளை தாண்டி ஹோமொஸ் நீரினையை கடந்து மும்பைக்கு வந்து சேர்ந்ததாக சில இந்திய ஊடகங்கள் சினிமா பாணியில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுவருகின்றது. 


அதாவது கப்பல் கப்டன் கப்பலின் Automatic Tracking சிஸ்டத்தை அணைத்துவிட்டு வந்ததாகவும், அதனால் ஈரானிய கடற் படையினர் கப்பலை கண்டுகொள்ளவில்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. 


அவ்வாறென்றால் ஏனைய நாடுகளின் கப்பல் கப்டன்களுக்கு இந்த தந்திரம் தெரியாதா ?     


ஆனால் அவ்வாறு எந்தவொரு இந்திய கப்பல்களையும் அனுமதிக்கவில்லை என்று ஈரானிய தரப்பு அறிவித்துள்ளது. 


ஹோமொஸ் நீரினை என்பது சமுத்திரமல்ல. அது 35 km தூரம் கொண்ட குறுகிய கடற் பாதையாகும். அதனால் பயணிக்கின்ற எந்தவொரு கப்பலையும் வெற்றுக் கண்களினால் பார்க்க முயும். 


தற்போதைய போர் சூழலில் ஈரானிய கடற்படையினர்களின் பலத்த கண்காணிப்பை தாண்டி அவ்வாறு ஹோமொஸ் நீரிணையை கடந்து இந்திய கப்பல் வந்து சேர்ந்தது என்பது பொய்யான பிரச்சாரமாகும். 


இங்கே படத்தில் காட்டியவாறு, சில நேரம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவூதி அரேபியாவின் ஏனைய துறைமுகத்திலிருந்து குறித்த கப்பல் வந்திருக்கலாம். அவ்வாறு வருவதற்கு ஹோமொஸ் நீரினையை தாண்ட வேண்டியதில்லை. 


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال