JobVibe.lk - Sri Lanka Job Portal

போதைப் பொருள்கள் 191 கிலோ 673 கிராம் மற்றும் 3482 போதை வில்லைகள் வணாத்தவில்லு எரிப்பு உலையில் அழிக்கப்பட்டன

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் மூலம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த ஹெரோயின் 40 கிலோ 539 கிராம், கெத்தீன் வகை  போதைப் பொருள் 132 கிலோ 79 கிராம், கொகேன் 55 கிராம் மற்றும் 3482 போதை வில்லைகள் ஆகியவை எரித்து அழிப்பதற்காக வெள்ளிக்கிழமை (13)  கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது 


மேலும், இத் தொகைக்கு மேலதிகமாக  பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த ஹெரோயின் 19 கிலோவும், இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திலுள்ள சுமார் 1500 வழக்குகளுக்குரிய அனைத்து சான்றுப் பொருட்களும் இத்துடன்  அழிக்க திட்டமிடப்பட்டிருந்து


பொலிஸ் விசேட அதிரடிப் படையின் விசேட பாதுகாப்பின் கீழ் வெள்ளிக்கிழமை (13) வணாத்தவில்லு பகுதியில் உள்ள லக்டோவத்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிப்பு உலைக்கு இப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது 


அவற்றை எரித்து அழிக்கும் நடவடிக்கையை கண்காணிக்க நீதிவான்கள், இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்தின் அதிகாரிகள்,  தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال