JobVibe.lk - Sri Lanka Job Portal

கொக்கரல்ல பகுதியில் பஸ் – பிக்கப் விபத்து: 13 வயது சிறுமி உயிரிழப்பு இருவர் காயம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம், குருநாகல் மற்றும் மெல்சிறிபுர இடையே உள்ள கொக்கரல்ல பகுதியில் வெள்ளிக்கிழமை (13) நள்ளிரவு நேரத்தில் எதிரே வந்த பஸ்ஸுடன் மோதி  விபத்து 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 


பிக்கப் வாகனத்தில் பயணித்த 13 வயது சிறுமியே  உயிரிழந்துள்ளதாகவும்  மேலும் அவரின் தாயாரும் மாமாவும் காயங்களுக்கு உள்ளாகி முதலில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال