JobVibe.lk - Sri Lanka Job Portal

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்து நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.


அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக, முகாம் மைதானத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுற்றித் திரிந்த காட்டு யானையை அவதானித்து, அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பேரில், காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வந்த ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை கடற்படை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال