Breaking News

மன்னார் பாலகமுனை கடல் பகுதியில் கடல் அட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், மன்னாரின் பாலகமுனை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை (20) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று (03) நபர்களையும், முந்நூற்று நான்கு (304) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.


அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான புஸ்ஸதேவவினால் மன்னார் பாலகமுனை பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த மூன்று (03) நபர்கள், முந்நூற்று நான்கு (304) கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு (01) மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.


இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்ப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் 21 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள். சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.





No comments