JobVibe.lk - Sri Lanka Job Portal

எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் ? அமெரிக்க, இஸ்ரேலிய மக்களின் மனோநிலை என்ன ?

அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் என்றுமில்லாதவாறு போருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதானது, இவ்விரு நாடுகளும் ஈரானை தோற்கடிக்கவில்லை என்ற ஆதங்கமே தவிர, அநீதிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இதனை கருதக்கூடாது. 


அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் ஆட்சிக்கு வருகின்ற தலைவர்கள் தங்களது முதலாவது பருவகால ஆட்சியில் ஏதாவதொரு நாட்டின் மீது தாக்குதல் நடாத்தி இராணுவ வெற்றியை காண்பித்த பின்புதான் இரண்டாவது பருவகால ஆட்சிக்காக தேர்தலுக்கு சென்று வெற்றி பெறுவார்கள். இது கடந்தகால வரலாறு. 


இதிலிருந்து இவ்விரு நாடுகளில் உள்ள மக்களின் மனோநிலையானது அடக்கு முறைக்கு ஆதரவாகவும், மற்றய நாடுகளின் வளங்களை சுரண்டுவதனை அங்கீகரிக்கின்றார்கள் என்றுதான் அர்த்தமாகும்.


தற்போது ஈரான் மீதான தாக்குதலில் வெற்றிபெறவில்லை என்ற அவமானம் காரணமாகவே ஆட்சி தலைவருக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கியுள்ளார்கள். 


சில நேரம் ஈரான் தோல்வியடைந்திருந்தால், இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்காது. 


அமெரிக்க, இஸ்ரேலிய மக்கள் அமைதியையும், நீதியையும் விரும்புகின்ற மக்களாக இருந்திருந்தால், அநீதியான போர் ஆரம்பித்தபோது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்திருக்கலாம். 


அத்துடன் கடந்த காலங்களில் மற்றய நாடுகள் மீது குண்டு போட்டு அப்பாவி மக்களை கொலை செய்த ஆட்சி தலைவர்களை தேர்தலில் தோற்கடித்திருக்கலாம்.  


எனவே அமெரிக்க, இஸ்ரேல் மக்களின் மனோநிலையானது மேலாதிக்க சிந்தனை கொண்டதாகும். 


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال