Breaking News

நடமாடும் ரேடார் தளத்தின் இழப்பும், அமெரிக்காவின் மாபெரும் தோல்வியும்.

ஈரானுக்கு எதிராக தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்பாக அமெரிக்காவின் E-3 Sentry AWACS (Airborne Warning and Control System) விமானத்தின் செயற்பாடுகள் அதிகரித்திருந்தது. இதனால் இந்த விமானத்தை ஈரான் கடுமையாக குறிவைத்தது. 


கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் “"ஈரான் வான்வெளி அருகே அமெரிக்காவின் E-3 Sentry AWACS விமானம் செயலிழந்தது”" என்ற தலைப்பில் செய்தி பரபரப்பாகியது. அப்போது இதுபற்றி விரிவாக கட்டுரை எழுதியிருந்தேன். 


ஆனால் தற்போது சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் படைத்தளத்தில் இந்த விமானத்தை ஈரான் தாக்கியழித்ததாகவும், இதன் பெறுமதி $700 பில்லியன் என்றும் செய்தி வைரலாகியுள்ளது. பறக்கும்போது இதனை இலக்குவைப்பது கடினம் என்பதனால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தாக்கியிருக்கலாம். 

  

அமெரிக்கா தனது போர் முறையில், தொழில் நுட்பத்தினை மாத்திரம் நம்பியுள்ளது. அவ்வாறான தொழில்நுட்பம் செயலிழந்தால், உலகை அச்சுறுத்தும் சக்தியை அமெரிக்கா இழந்துவிடும். 


E-3 Sentry AWACS என்பது பறக்கும் ரேடார் தளம் மட்டுமல்ல. 


அது; 

👉வான்வழி கண்காணிப்பு, 


👉எதிரி விமானம் மற்றும் ஏவுகணைகளை கண்டறிதல், 


👉போர் விமானங்களை வழிநடத்தல், 


👉வான்வெளியை கட்டுப்படுத்தல்,

 

👉ஒருங்கிணைந்த கட்டளை மையம் எனப் பல செயல்பாடுகளைக் கொண்டது. 


அமெரிக்கா தனது AWACS படையனியின் ஒரு பகுதியை ஈரானைச் சூழ்ந்த பிராந்தியத்தில் நிலைநிறுத்தி வான் பரப்பை கண்காணித்து ஒருங்கிணைக்கிறது.    


இந்த நிலையில் AWACS அழிக்கப்பட்டால், 


👉போர் விமானங்களை வழிநடத்துவதில் குழப்பம் ஏற்படும். 


👉ஏவுகணை மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்களை கண்டறிவதில் தடை ஏற்படும். 


👉வான்வெளியை கட்டுப்படுத்த முடியாது. 


👉தங்களுக்குள் தாக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்படும்.


ஈரான் – அமெரிக்கா போர் உச்சம் அடைந்துள்ள நிலையில், இந்த விமானத்தின் இழப்பானது அமெரிக்காவுக்கு தோல்விக்குமேல் தோல்வியான மாபெரும் தோல்வியாக கருதப்படுகின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments