JobVibe.lk - Sri Lanka Job Portal

கொழும்பு ஸ்மார்ட்கிரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கொழும்பு ஸ்மார்ட்கிரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (28) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்வுக்கு ஸ்மார்ட் கிரோ கல்வி நிலைய பணிப்பாளர் திருமதி மேனன் தேவராஜ் பிள்ளை தலைமையேற்றார்.


இவ்விழாவின் பிரதம அதிதிகளாக ஹாஷிம் உமர் பௌண்டேஷன் நிறுவனரான தொழிலதிபர் ஹாஷிம் உமர் மற்றும் மர்யம் ஹாஷிம் உமர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.


ஆபாகாஸ் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இவ்விழாவில் கல்வி நிலைய ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال