மாம்புரி கடற்கரையில் பீடி இலைகள் மற்றும் ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்த கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் கற்பிட்டி மாம்புரி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15 ) நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் பதினாறு (116) கிலோகிராம் ஏலக்காய் ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னியால் கற்பிட்டியின் மாம்புரி கடற்கரைப் பகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் பதினாறு (116) கிலோகிராம் ஏலக்காய் ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள், ஏலக்காய் மற்றும் குறித்த டிங்கி படகு ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.





No comments