JobVibe.lk - Sri Lanka Job Portal

அரபு நாடுகள்மீது ஈரான் தாக்குதல் நடத்துவது நியாயமா ?

ஈரானுக்கு எதிரான போரில், தங்களது நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்களை மட்டுமல்லாமல், போர் விமானங்கள் பறப்பதற்கும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது.  


அதனால் B2 போன்ற விமானங்கள் ஆபிரிக்காவின் கரையோரம் வழியாக நீண்ட தூரம் பயணித்து வருவதாக கூறப்படுகின்றது. 


ஐரோப்பிய நாடுகளினால் தங்களது வான் பரப்பை பாவிப்பதற்கு தடை விதிக்க முடியுமென்றால், அரபு நாடுகளினால் ஏன் அவ்வாறு முடியாது ? 


அமெரிக்காவின் போர் விமானங்களும், அதற்கு எரிபொருள் நிரப்புகின்ற விமானங்களும் அரபு நாட்டுத் தளங்களை பயன்படுத்தி வருகின்றது. அத்துடன் இஸ்ரேலிய விமானங்கள் அரபு நாடுகளின் வான் பரப்பை பாவிக்கின்றது.  


இவ்வாறு ஈரானுக்கு எதிரான போரில், வான் பரப்பையும், தளங்களையும் எதிரிகளுக்கு வழங்கியதன் மூலம் அரபு நாடுகளும் போரின் பங்காளிகள்.  


எனவே அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை மட்டுமல்ல, அந்நாட்டு அரண்மனைகள், மன்னர்கள், இளவரசர்கள் மற்றும் மன்னர் குஞ்சுகள் என அனைவர்மீதும் ஈரான் ஏவுகணைகளை செலுத்த வேண்டும் என்பதுதான் போரியல் நீதியாகும். 


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال