ஈரானுக்கு எதிராக நேட்டோ ஏன் களமிறங்கவில்லை ? நேட்டோ நாடுகள் உத்தமர்களா ?
ஒரு நாட்டின்மீது போர் தொடுப்பதற்கு முன்பு நேட்டோ நாடுகளுடன் கலந்துரையாடி அவர்களது சம்மதத்தினை பெற்ற பின்புதான் அமெரிக்கா களத்தில் இறங்கும்.
அவ்வாறான நேட்டோவின் சம்மதத்திற்காக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஒவ்வொரு அங்கத்தவ நாடுகளுக்கும் அவசர பயணத்தினை மேற்கொள்வார்.
ஆனால் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஊடகங்கள் மூலமாகவே நேட்டோ நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி அழைத்துள்ளார். இது அமெரிக்காவின் தவறான ராஜதந்திர அணுகுமுறையாகும்.
அதாவது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்பு முறையான ராஜதந்திர நடைமுறையை பின்பற்றவில்லை என்பதனால் நேட்டோ நாடுகள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைவதற்கு மறுத்திருக்கலாம்.
அவ்வாறு மறுத்துள்ளார்கள் என்பதற்காக, நேட்டோ நாடுகள் நீதி தவறாத உத்தமர்கள் என்று கருதுவது தவறானது.
ஏனெனில் எந்தவித நியாயமுமின்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதனை உலகத்தை நம்பச்செய்து ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட முஸ்லிம் நாடுகள் மீது நேட்டோ நாடுகளின் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அல்ல. பல லட்சங்கள் ஆகும்.
ஒருதலைப் பட்சமாக போரை ஆரம்பித்துவிட்டு, தற்போது ஈரானை வெல்ல முடியாது என்ற நிலை உருவானதினாலேயே தங்களை உதவிக்கு அழைக்கிறார்கள் என்று நேட்டோவினால் சிந்திக்க தெரியாமலில்லை.
அத்துடன் போரில் ஈரான் பலமான நிலையில் இருப்பதனால், ஒருசில அமெரிக்க அடிமை நாடுகளும் அச்சத்தின் காரணமாக உதவிக்கு செல்ல தயங்குகிறது. சில நேரம் ஈரான் பலயீனமாக இருந்திருந்தால், சில நாடுகள் உதவிக்கு சென்றிருக்கும் என்பதனை மறுக்க முடியாது.
எனவே அமெரிக்காவின் அழைப்பினை மறுத்தமைக்கு ட்ரம்ப்பின் எதேச்சதிகாரம் உட்பட வேறு பல காரணங்கள் இருந்தாலும். இங்கே நான் பதிவிட்டுள்ளமையும் பிரதான காரணமாகும்.
நேட்டோ நாடுகள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையவில்லை என்பதற்காக அந்நாடுகள் கடந்த காலங்களில் செய்த கொலைகளை மறந்துவிட முடியாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments