JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆலங்குடா விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதி அமைச்சரிடம் கையளிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஆலங்குடா பிரதேச விவசாயிகளின் சார்பில், ஆலங்குடா பிரஜா சக்தி   அமைப்பின்  மூலம் தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் விவசாய மற்றும் கால்நடைகள் பிரதி  அமைச்சரிடம் சனிக்கிழமை (14) நேரடியாக கையளிக்கப்பட்டது 


கற்பிட்டி ஆலங்குடா பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து இந்த மகஜர் மூலம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார பிரச்சினைகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு, விவசாய உபகரணங்கள், மண் பரிசோதனை மையம், விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டம், விவசாயத் தோட்டங்களுக்கு செல்லும் வீதிகள் சீரமைத்தல் போன்ற பல முக்கிய கோரிக்கைகள் இம் மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளது 


இதன் ஊடாக கற்பிட்டி ஆலங்குடா  விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான தீர்வுகள் கிடைக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும்  நம்புவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன்போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல், கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ் மற்றும் உப தலைவர் சமன் குமார ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال