JobVibe.lk - Sri Lanka Job Portal

ரிஷாட் பதியுதீனால் அல்- காஸிம் சிட்டி பள்ளிவாயலின் மேல்தள திறப்பும், ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பும்!

புத்தளம், அல்- காஸிம் சிட்டி  பள்ளிவாயலில், புனர்நிர்மாணம் செய்யப்பட மேல்தள திறப்பு விழாவும், புதிய பகுதிநேர ஹிப்ழ் (மனன பிரிவு) மத்ரஸாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் ஞாயிறு (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, “இக்ராஹ் – ஓதுவீராக” என்ற தொனிப்பொருளின் கீழ், இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வு, இவ்வருடத்திற்கான 3ஆவது கல்விசார் நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களிடையே கல்வி விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.


இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான என். டி. தாஹீர் மரைக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், காசிம் சிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அதிபர்கள், பொது மக்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال