JobVibe.lk - Sri Lanka Job Portal

சியோனிஸ்ட்களைவிட RSS சங்கிகள் ஆபத்தானவர்கள்.

ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் எதிரான யதார்த்தங்களை எழுதுகின்றபோது அது ஈரானுக்கு ஆதரவாக இருக்கிற காரணத்தினால் சில இந்தியாவில் உள்ள RSS சங்கிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 


எவ்வாறு பின்னூட்டம் வழங்க வேண்டுமென்ற அடிப்படை அரசியல் அறிவோ, எழுத்தில் நாகரீகமோ அவர்களிடம் இல்லை. இவ்வாறானவர்கள் சியோனிஸ்டைவிட கேவலமானவர்களாக உள்ளார்கள். 


அதாவது இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் சியோனிஸ்ட்களைவிட இந்திய RSS சங்கிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ளது. அதிலும் போலி முகநூல்களின் பாவனை ஏராளம். 


ஆனால் இந்திய மக்களின் மனோநிலை வேறாக உள்ளது. அமெரிக்க, இஸ்ரேலிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், சுப்ரீம் லீடர் அலி கொமைனி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 


எனவேதான் நாங்கள் இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிக்கின்றோம். ஆனால் RSS சங்கிகளையும், அவர்களுக்கு அரணாக உள்ள BJP யையும் வெறுக்கின்றோம்.   


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال