Breaking News

புத்தளம் ரத்மல்யாயவில் சமூக அபிவிருத்தி சபை உருவாக்கம்.

எம்.யூ.எம்.சனூன் 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘பிரஜா சக்தி - வறுமையை இல்லாமலாக்கும் தேசிய வேலைத்திட்டம்’ எனும் சமூக வலுவூட்டல் கொள்கையின் கீழ், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் பொது மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் ஒரு பொறி முறையாக, ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் அந்தந்த பிரிவுக்கான அபிவிருத்திகளை அக்கிராம பிரிவின் மக்களினால் தீர்மானிக்கும் மக்கள் நேய ஆட்சியின் அத்திவாரமாக சமூக அபிவிருத்தி சபை கருதப்படுகிறது.


அந்த வகையில் புத்தளம் ரத்மல்யாய கிராம சேவையாளர் பிரிவில் பிரஜா சக்தி குழு, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் பிரஜா சக்தி தலைவர் ஐ.எம்.கியாஸ், செயலாளரும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான பார்த்தீபன் தலைமையில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.


இனி வரும் காலங்களில் அரச அதிகாரம் பெற்ற குழுவாக கருதப்படும் இந்த சமூக அபிவிருத்தி சபையானது பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னின்று நிறைவேற்றும் என்பதுடன், ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் மக்கள் தங்கள் தேவைகளை சமர்ப்பிக்க முடியும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பாக அவர்களின் கிராம மஸ்ஜித், பெளத்த விகாரைகளுக்கு உத்தியோகபூர்வ நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.


ரத்மல்யாய பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு தன்னார்வத் தொண்டு வழங்கிய நலன் விரும்பிகள் அனைவருக்கும் பிரஜா சக்தி தலைவரும், புத்தளம் பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எம்.கியாஸ் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.







No comments