மன்னார் தெற்கு கடலில் இரவு நேரத்தில் சட்டவிரோத சுழியோடிய 04 சந்தேக நபர்களை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் புதன்கிழமை (04)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், நானூற்று முப்பத்தேழு (437) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகையும் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மன்னார் தெற்கு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி (01) படகு பரிசோதிக்கப்பட்டது. அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், நானூற்று முப்பத்தேழு (437) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகையும் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் 32 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள். சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளனர்.




No comments