JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கடையாமோட்டையில் விபத்து இரு மாணவர்கள் உயிரிழப்பு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் கடையாமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இந்த சம்பவம் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வீதியில் சென்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மீது லொறி ஒன்று மோதியதால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கடையாமோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுகும் 03 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய சஞ்சன மற்றும் அதே பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய திலிப் மதுசங்க என்ற மாணவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் அறிவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال