JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட இன ஐக்கியத்திற்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று மாநகர சபை மண்டபத்தில் ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் கல்முனை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். முர்ஷித் முப்தி சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, மார்க்க சொற்பொழிவாற்றினார்.


இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன், கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபையின் உள்ளுராட்சி உத்தியோகத்தர் சர்ஜுன் தாரிக் அலி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் உட்பட கிளைத் தலைவர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், நூலகர்கள் உட்பட இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.





















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال