JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி மரிக்கார்சேனையைச் சேர்ந்த அதிபர் M.L.M. றிபாய்தீன் அவர்களின் அன்புத் தாய் உம்மு ஸல்மா அவர்கள் காலமானார்.

மதுரங்குளி மரிக்கார்சேனையைச் சேர்ந்த உம்மு ஸல்மா அவர்கள் இன்று (01) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் அல்ஹாஜ் லாபிர் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நூர்தீன், ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், றிபாய்தீன் (அதிபர் பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம்), பைஸல், பைரூஸ், பதுர்ஸமான் (யாசீன்), றியாத், றிஸ்னா பானு, ஆகியோரின் அன்புத் தாயும், சிபானா, தஸ்லிம் பானு, றிஸ்னா, உம்மு ஜுஹைறா, பர்ஸான் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று  இஷாத் தொழுகையுடன் கடையாமோட்டை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار


தகவல்

அதிபர் றிபாய்தீன்

புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال