JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கண்டக்குழி உல்லாச விடுதிகளுக்கான காபட் வீதியில் மற்றுமோர் விபத்து இருவருக்கு காயம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி கண்டக்குழி உல்லாச விடுதிகளுக்கு செல்லும் காபட் வீதியில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் அருகாமையில் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா லொறி மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டி  தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டதில் ஆட்டோவின் முன் பகுதி சேதமடைந்தது டன் இருவர் காயங்களுக்கு உள்ளாகி கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இதே காபட் வீதியில் வெள்ளிக்கிழமை இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال