JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி ரெட்பானா கஜுவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

மதுரங்குளி ரெட்பானா கஜுவத்தை  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களை இரண்டாம் தர மாணவர்கள் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.


இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கஜுவத்தை பள்ளி தலைவர் அல்ஹாஜ் சாஜஹான் உள்ளிட்ட நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், தொழில் அதிபர் ஐயூப், கிராம அதிகாரி எம்.எஸ்.எம்.முஸப்பிர், கிராம அபிவிருத்தி அதிகாரி அஜீபா, முன்னாள் அதிபர் இஸட்.ஏ.சன்ஹீர் மௌலவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


முதலாம் தர புதிய மாணவர்களுக்காக வேண்டி மெருகூட்டப்பட்ட புதிய கட்டடமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டதோடு  இரண்டாம் தர மாணவர்களால் வரவேற்பு நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال