JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேசத்தில் பெண்களின் உற்பத்தி பொருட் கண்காட்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக கற்பிட்டியில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான ஒரு வருட சுயதொழில் பயிற்சி நெறியை சிறப்பாக நிறைவு செய்த பெண்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (30) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தையல் பயிற்சி ஆலோசகர் ஆர்.எஸ்.டப்ளியூ நிரோஷா ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி கலந்து சிறப்பித்தார் அத்தோடு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மர்ஜானா பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் சியானா வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் , கிராம அபிவிருத்தி புத்தளம் மாவட்ட இணைப்பாளர் பொருப்பாளர், மற்றும் வடமேல் மாகாண கிராம அபிவிருத்தியின் கற்பிட்டி பிரதேச செயல சங்கங்களின் தலைவர் அத்தோடு மேற்படி பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகளை சிறந்த முறையில் கற்பிட்டி பிரதேசத்தின் நான்காவது முறையாகவும் நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டு வரும் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஆப்தீன் ( அலாவுதீன்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


இப்பயிற்சின் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு மற்றும் குடும்பத்திற்கான மேலதிக வருமானம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் எனவும் கருத்து தெரிவித்த கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச உதவி செயலாளர் பிரியதர்ஷினி இச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருபவர்களுக்கும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال