JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய புலமையாளர்கள் கௌரவிப்பு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமை மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஐ.என்.எம். எம். லாஹிர் தலமையில் புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. எம். நௌஷாத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று (02) திங்கட்கிழமை கோலாகலமாக   நடைபெற்றது. 


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம். பைசல், கௌரவ அதிதிகளாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டி. எம். தாஹிர் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். றிகாஸ் விஷேட அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான கே. எம். எம். பைஸர் மரிக்கார், ஏ. ஜே. எம். றிபாஸ், ஏ. எச். எம். ஹாரூன் மற்றும் கொத்தாந்தீவு ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் கே. எம். இம்தியாஸ் ஆகியோரோடு, பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எஸ். எம். எம். ஹனிபா, ஏ. எச். எம். ஹபீஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
















































Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال