JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி புதுக்குடியிருப்பு பிரிவில் தெரு விளக்குகள் திருத்தும் பணி தீவிரம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபையின் தெரு விளக்குகள் பராமரிப்பு பிரிவினால் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ ஆர் எம் முஸம்மிலின் தொடர் வேண்டுகோளை அடுத்தும் எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டும் புதுக்குடியிருப்பு பிரிவில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெரும்பானாமையான தெரு விளக்குகள் திருத்தும் பணி திங்கட்கிழமை (02) இடம்பெற்றது 


இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கற்பிட்டி உயர் பீட உறுப்பினர்களான  ஆர்.எம் றஸ்மி , என்.பீ.எம் நவாஸ், ஆர் எம் ஜெஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேற்படி புதுக்குடியிருப்பு பிரிவின் தெரு விளக்குகள் திருத்தும் பணியினை மேற்கொள்வதற்கு மின் குமிழிகள் பெற்று தந்ததுடன் கற்பிட்டி பிரதேச சபையின் தெரு விளக்குகள் பாராமரிப்பு வாகானம் மற்றும்  தொழில்நுட்பவியலாளர்களை தந்துதவிய கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸூக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال