JobVibe.lk - Sri Lanka Job Portal

டச்பே, கீரிமுந்தல் , வெள்ளைக்காரன்குடா தீவுகள் கடல் அரிப்பால் அழியும் அபாயம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

வடமேற்கு கரையோரத்தில் கற்பிட்டி பிரதேசத்தின் தொண்மையான கிராமமாகிய டச்பே, கீரிமுந்தல், வெள்ளைக்காரன்குடா ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பழமை வாய்ந்த மீனவ கிராமமாகும்


மேற்படி மீனவ கிராமம் தற்போது கடல் அரிப்பினால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது விடயமாக கீரிமுந்தல் ஆலய சபையின் தலைவர் என்டன் டயஸ் டச்பே கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் நிரஞ்சன் பெர்னான்டோ மற்றும் மீனவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் கடற்றொழில் அமைச்சர் தர்மலிங்கம் சந்திரசேகரன் அவர்களை கடற்றொழில் அமைச்சில் சந்தித்து டச்பே, கீரிமுந்தல், வெள்ளைக்காரன்குடா ஆகிய தீவுகளை உள்ளடக்கிய மீனவ கிராமத்தின் கடலரிப்பு தொடர்பாகவும் அதனை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال