JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையால் குருநாகல் வாரியாபொலயில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவின் பயவ கிராமத்தில் நிறுவப்பட்ட  நீர் சுத்திகரிப்பு நிலையம் செவ்வாய்க்கிழமை (24 ) திறந்து வைக்கப்பட்டது.


கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், Lion Nation Foundation (Guarantee) Limited மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன்  கடற்படை இதுவரை 1150 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. 


பொதுமக்களுக்கு இவ்வாறு திறக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பயவ பகுதியில் உள்ள ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.  


அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் தூய்மையான இலங்கை தேசிய திட்டத்திற்கு இணங்க, இலங்கை கடற்படை சுத்தமான குடிநீரை வழங்கும் இந்த சமூக சேவைக்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال