JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஆனவாசலில் 882 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படை கடந்த புதன்கிழமை (25) கற்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டு, ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் எண்ணூற்று எண்பத்தி இரண்டு (882) கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டி ஒன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.


கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ கெப் வண்டி ஒன்றில் (01) போக்குவரத்துக்காக தயார் நிலையில் இருந்த சுமார் முந்நூற்று ஆறு (306) கிலோகிராம் பீடி இலைகள், குறித்த கெப் வண்டியுடன் (01) மற்றும் முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம், ஒரு புதரில்  இருந்த சுமார் ஐநூற்று எழுபத்தாறு (576) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினர் கைப்பற்றினர்.


மேலும், கடற்படை நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் மற்றும் கெப் வண்டி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறை சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال