JobVibe.lk - Sri Lanka Job Portal

கொலைகாரர்களுக்கு உதவிய மோடிக்கு உயர் விருது. உண்மையை கூறினால் இந்தியாவின் விரோதியா ?

இந்திய பிரதமருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டு, நெருக்கடியான காலகட்டங்களில், இந்தியா தங்களுடன் உறுதுணையாக இருந்ததாக இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு மோடியை பாராட்டியதுடன், இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசட்டினால் உயரிய விருதும் வழங்கப்பட்டது.


அதாவது, இரண்டு வருடங்களாக காசாவில் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இஸ்ரேல் கொலை செய்தபோது, உலகமே திரண்டு இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்தது. 


குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் யூதர்களும் இஸ்ரேலை கண்டித்ததுடன், சில நாடுகளிலிருந்து இஸ்ரேலிய தூதரகங்களை வெளியேற்றினர்.  


அத்துடன், தென் ஆபிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததுடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. 


உலகின் மனிதாபிமானங்களை காசா போரின்போது அறிய முடிந்தது. அத்துடன் பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல முக்கிய நாடுகள் பாலஸ்தீனுக்கு தனியான நாட்டுக்கான அங்கீகாரத்தினை வழங்கியிருந்தது.


இவ்வளவு நடந்தும் உலகின் ஜனநாயக நாடு என்று போற்றப்படுகின்ற இந்தியா அமைதிகாத்தது. இந்த அமைதிக்கு அர்த்தம் என்ன என்பதனை நெத்தன்யாகுவின் உரை மூலமும், மோடிக்கு வழங்கப்பட்ட விருது மூலமும் அறிந்துகொள்ள முடிகின்றது. 


அதாவது காசா மக்களை அழிப்பதற்கு மோடி அரசு இஸ்ரேலுக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்து விருது வழங்கியுள்ளனர்.  


மோடியின் இனவாத போக்கினை கண்டிக்கின்ற போது, அதனை இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறுவதாக நீங்கள் கருதினால், உங்களைப் போன்ற அரசியலை விளங்காத முட்டாள்கள் எவரும் இருக்க முடியாது. 


நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம். அது மனதுக்கு விருப்பமான நாடு. அங்கு ஏராளமான நண்பர்கள் உள்ளார்கள். 


அதுமட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிமராவ், மன்மோகன் சிங் ஆகியோர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அச்சமின்றி வாழ்ந்தார்கள். ஆனால் அந்த நிலைமை இன்றில்லை. 


தங்களது சுயநல அரசியல் இலாபத்துக்காக அப்பாவி மக்களை உசுப்பேத்தி இனவாதத்தினை விதைத்தவர்கள் BJP, RSS, VHP ஆகியோகர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.   


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال