JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி டச்பே கீரிமுந்தல் வெள்ளைக்காரன்குடாவின் கடலரிப்பை பார்வையிட்ட அஜீத் கிஹான் எம்.பி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

வடமேற்கு கரையோரத்தின் கற்பிட்டி பிரதேச தொண்மையான கிராமமான டச்பே, கீரிமுந்தல், வெள்ளைக்காரன்குடா மீனவ கிராமம் பழைய மன்னார் மாந்தோட்ட துறைமுக வர்த்தக பெருந்தோட்ட வரலாற்றுடன் தொடர்புபட்டது.


மேற்படி மீனவ கிராமம் தற்போது கடல் அரிப்பினால் அழிவடைந்து வருகின்றது இதனை கருத்தில் கொண்டு டச்பே கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் நிரஞ்சன் பெர்னான்டோவின் அழைப்பின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளருமான அஜீத் கிஹான் அண்மையில் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடலரிப்பால் பாதிக்கப்பட்ட டச்பே, கீரிமுந்தல், வெள்ளைக்காரன்குடா ஆகிய மீனவ கிராமத்தினை பார்வையிட்டதுடன் அங்குள்ள மீனவர்களுடனும் கலந்துரையாடி அடிப்படைத் தேவைகளையும் இம் மீனவ கிராம வரலாற்றையும் கேட்டறிந்து கொண்டார் 


இவ் விஜயத்தின் போது புத்தளம் மாவட்ட மீனவ திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், புத்தளம் கற்பிட்டி தீவுகளுக்கு பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர் ஆகியோரும் சமூகமளித்தமையும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال