JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வேப்பமடு மஸ்ஜித் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் வழிகாட்டலின் கீழ் வேப்பமடு (4ம் கட்டை) பகுதியில் அமைந்துள்ள 14 மஸ்ஜித்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் உயர்நோக்கில் வேப்பமடு (4ம் கட்டை) மஸ்ஜித் சம்மேளனம் புதன்கிழமை (25) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது 


இச் சம்மேளன உருவாக்கத்தின் பிரதான குறிக்கோள்களாக

மஸ்ஜித்களுக்கிடையேயான ஒற்றுமையை உறுதிப்படுத்துதல், தொழுகை நேரங்களை ஒழுங்குபடுத்தி ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துதல், மார்க்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், சமூக நலத்திட்டங்களை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்துச் செல்லுதல் எனவும் குறிப்பிடப்பட்டது


இந் நிகழ்வில் உலமாக்கள் மற்றும் 14 மஸ்ஜித்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 17 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டதுடன் சம்மேளனத்தின் நோக்கங்கள், பணித்திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.


இச்சம்மேளனம் சமுதாய ஒற்றுமையை பலப்படுத்தி, மார்க்க மற்றும் சமூகப் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க வலுவான ஒருங்கிணைப்புத் தளமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال