JobVibe.lk - Sri Lanka Job Portal

பாலஸ்தீன் குஜராத் கொலையாளிகளும், ICC யினால் தேடப்படும் குற்றவாளியுடன் ஜனநாயக நாட்டு பிரதமரின் நெருக்கமும்.

ஈரான், எந்த நேரத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு வந்திறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெஞ்சமின் நெத்தன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார். 


விரோதிக்கு விரோதி நண்பன் என்ற அடிப்படையில் இருவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள்.  


இனப்படுகொலையாளி என்ற அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஜனநாயக நாடொன்றின் பிரதமர் கட்டிப்பிடித்து நட்பை பரிமாறிக்கொண்டார்.  


காசாவில் உள்ள அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களையும், காசாவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குண்டு போட்டு நோயாளிகளை கொலை செய்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலையாளியுடன், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் நட்பு பாராட்டியுள்ளார். 


இதனை இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு என்று கடந்துசெல்ல முடியாது. ஏனெனில் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் சுமார் 3.7 பில்லியன் டொலர் மாத்திரமே. இது இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வர்த்தகமானது சிறு துளியாகும்.  


குறிப்பாக சவூதி அரேபியா, கத்தார், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடனான இந்திய வர்த்தகமானது 155 பில்லியன் டொலர். 


அதேநேரம் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரானுடனான வர்த்தகம் 2.5 பில்லியன் டொலர் ஆகும். இங்கே ஏனைய இஸ்லாமிய நாடுகளுடனான வர்த்தகம் பற்றி குறிப்பிடவில்லை. 


நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002 குஜராத் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.


கொள்ளையடிக்கப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் பல கோடிகளாகும். இன்றுவரைக்கும் அடக்குமுறைகள் அவ்வப்போது நடைபெறுகிறது. 

   

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மூலம் இனவாத அரசியல் கொள்கையினாலேயே நரேந்திர மோடி தலமையிலான BJP கட்சி இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றது. 


பல உலக தலைவர்கள் நெத்தன்யாகுவுடன் கைகுலுக்க தயங்குகின்ற நிலையில், இந்திய பிரதமரின் மிக நெருக்கமான நட்பானது இந்தியாவில் வாழ்கின்ற இருபது கோடி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிரானது மாத்திரமல்ல, இந்தியாவை நேசிக்கின்ற உலக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال