JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - ஓய்வு பெற்ற அதிபர் என். எம். எம். நஜீப் அவர்களின் அன்புச் சகோதரி சித்தி நஸீமா ஆசிரியை அவர்கள் காலமானார்.

சிலாபம் வட்டக்களியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி நஸீமா ஆசிரியை அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும்களான நெய்னா முஹம்மத்,  உம்மு ரலீஹா ஆகியோரின் அன்பு மகளும், பௌசுல் அமீர் (முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவு சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும், நுஹா, பஸாரத், ஆகியோரின் அன்புத் தாயாரும்,  மர்ஹும் நஸீர், இஸ்மியா, நஜீப் அதிபர் (ஓய்வு நிலை), நவாஸ், நபீலா, ஆகியோரின் அன்புச் சகோதரியும், சித்தீக், ஹபீல், ஆகியோரின் மைத்துனியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (06) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சிலாபம் வட்டக்களி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار


தகவல்

சகோதரர் நஜீப்

அதிபர் ஓய்வு நிலை




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال