JobVibe.lk - Sri Lanka Job Portal

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

78 வது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக வட மாகாணத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பானது சுதந்திர தினத்தில் (04) மேற்கொள்ளப்பட்டது.


“கிளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னணி பங்குதாரராக, கடற்படை அதன் கீழ் செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்கள் மூலம் தொடர்ந்து பங்களிக்கிறது.


அதன்படி, “கிளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்துடன் இணைந்து, 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் திட்டங்களின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தால் கீரிமலை பேருந்து நிலையம் மற்றும் பொன்னா​லை குளத்தைச் சுற்றியுள்ள பகுதியும் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தால் கசுரினா கடற்கரையும் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தால் நெடுந்தீவு பிராந்திய மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்வதற்கும் இவ்வாறு சமூக ஆதரவை வழங்கியது.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال