JobVibe.lk - Sri Lanka Job Portal

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் கோரிக்கைகள் என்ன ? பேச்சுவார்த்தையா? போரா? எது சிறந்தது?

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கும் அழுத்தம்;  


👉அணு ஆயுத திட்டத்துக்காக யுரேனியம் செறிவூட்டுவதனை கைவிட வேண்டும்.   


👉ஏவுகணை வீச்சு தூரத்தினை 200km க்கு மட்டுப்படுத்த வேண்டும். அதாவது நீண்டதூர மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தினை முற்றாக கைவிட வேண்டும். 


👉ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் போன்ற எந்தவொரு ஆயுத இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்குவதனையும், அவர்களுக்கு உதவி செய்வதனையும் முற்றாக நிறுத்த வேண்டும். 


👉அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்புக்காக கலகங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கக்கூடாது.


அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் வழங்கிய பதில்;

  

👉ஈரான்மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினை நீக்க வேண்டும்.


👉நீண்டதூர மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் பற்றி பேசக்கூடாது. 


👉ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் போன்ற ஆயுத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றி பேசக்கூடாது. 


👉ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்புக்காக உள்நாட்டில் கலகங்களில் ஈடுபட்டடு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, பாதுகாப்பு படையினர்களை கொலை செய்தவர்களுக்கான தண்டனை வழங்குவதானது ஈரானிய சட்டத்திற்குட்பட்டது. 


👉அணு ஆயுத திட்டம் பற்றி பேசலாம். 


இஸ்ரேலை பாதுகாப்பதற்காக வழங்குகின்ற அழுத்தமாகவே அமெரிக்காவின் கோரிக்கைகளை அவதானிக்க முடிகின்றது. 


ஈரான் எந்தவொரு நாட்டின்மீதும் வலிந்து சென்று தாக்குதல் நடத்தியதில்லை. ஆனால் இஸ்ரேலின் நிலைப்பாடு அவ்வாறில்லை. 


அதாவது ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் சதி செய்வது, ஈரானிய விஞ்ஞானிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், அறிவியலாளர்கள் பலரை இஸ்ரேல் கொலை செய்ததுடன், வலிந்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. 


இவ்வாறான நாசகாரிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு ஈரான் முயல்கிறது.


ஆனால் ஒப்பந்தம் மூலமாக ஈரான் உட்பட ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹௌதீக்கள், ஈராக்கில் உள்ள ஆயுத இயக்கங்கள் போன்ற சக்திகளை முற்றாக அழிப்பதற்காக இஸ்ரேலுக்கு அமெரிக்கா களம் அமைத்துக் கொடுக்கின்றது. 


இந்தநிலையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதனைவிட, வெற்றியோ, தோல்வியோ போரிடுவதே சிறந்தது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال