JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டிகள் நீண்ட காலத்துக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது.

எம்.யூ.எம்.சனூன் 

புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டிகள் அண்மையில் (14) மணல்தீவு புனித அந்தோனியார் விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் பா. ஜெனற்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


இப்பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியானது பல வருடங்களாக நடைபெறாத நிலையில் இவ்வாண்டு மிக சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக புத்தளம் பங்கின் பங்குத்தந்தை அருட்பணி டிலங்க, மணல்தீவு திருச்சிலுவை கன்னியர் மட தலைவி அருட்சகோதரி லொரேட்டா மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள்,  புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் திரு. ஜிப்சன், பாடசாலையின் பிரதி மற்றும் உப அதிபர்கள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், அயற் கிராம பள்ளிகளின் தலைவர்கள், கிறிஸ்தவ சபையின் பாதிரியார், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்


இவ் விளையாட்டு போட்டியானது சென். ஜோசப், சென் அன்டனி என்ற இரு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றதில் சென் அன்டனி இல்லம் வெற்றி வாகை சூடியது. 


இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் 9 வகுப்புகள் மாத்திரமே இருந்தாலும் மிகவும் சிறப்பாக இவ் விளையாட்டு போட்டியானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 


இதற்குக் காரணம் இப்பாடசாலையைச் சேர்ந்த மணல் தீவு உட்பட மதீனா நகர், ஒற்றைப்பனை, நான்காம் கட்டை, சேகுவந்தீவு கிராம மக்கள் மற்றும் இப்பிரதேசங்களில் காணப்படும் தொழில் அதிபர்களினதும் அனுசரணையுடன் இவ் விளையாட்டுப் போட்டியானது அனைவரினதும் உள்ளம் கவரும் வகையிலும் பாராட்டத்தக்க விதத்திலும் மிகவும் சிறப்பாக நடந்து புதியதொரு சரித்திரம் படைத்துள்ளதாக அதிபர் ஜெனற்ராஜ் தெரிவித்தார்.






























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال