JobVibe.lk - Sri Lanka Job Portal

தேடல் ஊடக கல்லூரியினால் நடத்தப்பட்ட சிறுவர் குரல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

தேடல் ஊடக கல்லூரியினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சிறுவர்களின் திறமைகளுக்கு முதலிடம் வழங்கும் வகையில் சிறுவர் குரல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (14) கண்டி ஜின்னாஹ் ஞாபகார்த்த மண்டபத்தில் தேடல் ஊடக கல்லூரியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஐ.எம்.ஹம்தி தலைமையில் இடம்பெற்றது.


இதேவேளை சமகாலத்தில் தேடல் ஊடக நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 


இந்த நிகழ்வில் அதிதிகளாக வைத்தியர் ருக்சானா ஜவாஹிர், எப்.என்.மீடியா நெட்வேக் நிறுவனத்தின் உரிமையாளரும், சக்தி தொலைக்காட்சி மற்றும் சிரச தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளருமான ஏ.டபில்யூ.எம். பஸ்லான், இலங்கையின் முதலாவது இளம் ஊக்குவிப்பு பேச்சாளர் சைபுல்லா பஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் 25 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் அங்கத்துவ நியமன கடிதம், தேடல் ஊடக கல்லூரியின் உத்தியோகபூர்வ ஆடை ஆகியன வழங்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக சத்திய பிரமாணமும் செய்து ஒருங்கிணைப்பாளர்களை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் நிகழ்வின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல் அமர்வு ஒன்று நடாத்தப்பட்டது.


ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள் என்ன, அதை எவ்வாறு நிறைவேற்றுவது போன்ற பல்வேறு விடயங்கள் தேடல் ஊடக கல்லூரியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஐ.எம்.ஹம்தி தெளிவூட்டினார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் பல மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட சிறந்த ஒரு களமாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது..










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال