JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியிலும் சுதந்திர தின நிகழ்வுகள்.

 எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியிலும் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.


காஸிமிய்யா அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.டீ.எம்.தாஹிர் கலந்து சிறப்பித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


இந்த நிகழ்வில் காஸிமிய்யாவின் பரிபாலன சபை தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், காஸிமிய்யா முகாமைத்துவ சபை தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பாரிஸ் (காஸிமி,மதனி) புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிஸார், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.முர்ஷித் உள்ளிட்ட மத்ரஸா மாணவர்களும் பங்கேற்றனர்.


என்.டீ.எம்.தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பாராட்டும் விதமாக, இதன் போது அவர் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال