JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இஸ்மாயில் புரத்தில் மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்கப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளைக்குட்பட்ட புத்தளம் ஆறாம் மைல் கல் இஸ்மாயில்புரம் பகுதியில் அமைந்துள்ள 10 மஸ்ஜித்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் உயர் நோக்கில், மஸ்ஜித் சம்மேளனம் உதயமாகியுள்ளது.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டுதலில், ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி.ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி தலைமையில் அண்மையில் (17) இந்த மஸ்ஜித் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது.


இச்சம்மேளனம், மஸ்ஜித்களுக்கிடையேயான ஒற்றுமையை உறுதிப்படுத்துதல், தொழுகை நேரங்களை ஒழுங்குபடுத்துதல், மார்க்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சமூக நலத்திட்டங்களை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக அமைகிறது.


இந்நிகழ்வில் சமூகத்தின் உலமாக்கள் மற்றும் இஸ்மாயில்புரம் பகுதிக்குட்பட்ட 10 மஸ்ஜித்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 11 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டதுடன், சம்மேளனத்தின் நோக்கங்கள், பணித்திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.


இச்சம்மேளனம் சமுதாய ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி, மார்க்க மற்றும் சமூகப் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க வலுவான ஒருங்கிணைப்புத் தளமாக விளங்கும் என நம்பப்படுகின்றது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال