JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபு மத்ரஸா வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் திறப்பு விழா.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபு மத்ரஸா வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வுகள் புதன்கிழமை காலை (18) இடம்பெற்றது.


அல் மஸ்ஜிதுல் சித்தீக்கா எனும் இந்த புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வானது மத்ரசாவின் அதிபரும், புத்தளம் நகர ஜம்இய்யத்துல் உலமா பிரதி தலைவருமான அஷ்ஷெய்க் எம்.இஸட்.சௌக்கி பஹ்ஜி தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக்கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி, புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் சனூஸ் ரஹ்மானி, புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க், அல்ஹாபிழ், அல்காரி ஏ.எம்.எம்.ரியாஸ் தேவ்பந்தி, புத்தளம் அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் இமாமுத்தீன் அஷ்ரபி உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மத்ரஸா மாணவர்களும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال