JobVibe.lk - Sri Lanka Job Portal

புது வடிவம் பெறும் புத்தளம் பெரியபள்ளியின் ஹிஸ்பு மஜ்லிஸ்.

எம்.யூ.எம்.சனூன்

புனித ரமழான் மாதத்தின் இரவு நேர சிறப்பு வணக்கமான புனித குர்ஆனை ஓதும் ‘ஹிஸ்பு மஜ்லிஸ்’  முதலாம் நோன்பு இரவு தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமானது.


ரமழான் இரவுகளில், குறிப்பாக பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகள் மண்டபங்களிலும் புனித குர்ஆனை ‘தர்தீல்’ அச்சரம் - ஓசை - ஒழுங்கு - அமைப்பு பிசகாமல் ஓதுவதற்கு பயிலும் மன்றங்களான இவ் ஹிஸ்பு மஜ்லிஸ்கள் முஸ்லிம் சமூகத்தில் பன்னெடுங்காலமாக இயங்கிவரும் வணக்கம் சார்ந்த கற்றல் நடவடிக்கையாகும்.


சம்பிரதாய ஹிஸ்பு மஜ்லிஸ் அமைப்புக்கு மாற்றமாக அனைவரும் கற்றுக்கொள்ளும் விதமாக  பெரியபள்ளியின் ஹிஸ்பு மஜ்லிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இவ் ஹிஸ்பு மஜ்லிஸை கற்பிட்டி, கண்டக்குடாவைப் பிறப்பிடமாகக்கொண்ட அல்ஹாபிழ் எம். ஹக்கீம் முஹம்மத் இர்பான் நடத்துகின்றார். 


இவர் கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியில் ஹிப்ழ் மற்றும் ஷரீஆ துறையை நிறைவு செய்து பின்னர் தெஹிவளை,  களுபோவிலயில் அமைந்துள்ள ஹைஅதுல் குர்ஆன்  மத்ரஸாவின் மர்கஸ் உபை இபுனு கஃப் கலாபீடத்தில் “அல்-முஜாஸ் பி ரிவாயதி ஹப்ஸ்” அமைப்பில் கிராஅத் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.


வயது,  தற்போது குர்ஆனை ஓதும் திறன், ஆற்றல் பற்றிய எவ்வித பேதமும் இல்லாமல் எல்லோரும் கற்கும் விதமாக இவ் ஹிஸ்பு மஜ்லிஸ் நடைபெறுகின்றது.


புனித குர்ஆனை தர்தீலாக ஓதும் கலையைக் கற்பித்து பயிற்சியளிக்கும் சிறப்புத் தேர்ச்சிபெற்ற உஸ்தாத் அமைந்துள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவ் ஹிஸ்பு மஜ்லிஸில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களை பெரிய பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال