JobVibe.lk - Sri Lanka Job Portal

கொழும்பில் அரசின் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கையில் தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்கால அரசு  பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்காக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் ஒன்றை கொண்டு வருகின்றமை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை அரசுக்கு எடுத்துக்காட்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீதி அமைச்சுக்கு முன்னால் இடம் பெற்று வருகிறது. அதன் வரிசையில் 13 ம் திகதி வெள்ளிக்கிழமை மலையக மக்கள் பிரதிநிதிகள், மலையக சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புகள் இணைந்து  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.


தற்போது நடைமுறையிலிருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்துவதாக கூறிய அரசு வேறு பெயரில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதை மக்கள் எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 


அத்தோடு மலையக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் சந்தர்ப்பங்களில் கூட இந்த புதிய பயங்கரவாத சட்டத்தின் ஊடாக அம் மக்களை தடுக்க முடியுமென கருத்துக்களையும் முன் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்  


அரசு உடனடியாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال