JobVibe.lk - Sri Lanka Job Portal

கஜுவத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மிக நீண்டகாலத்துக்கு பிறகு வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கஜுவத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மிக நீண்டகாலத்துக்கு பிறகு சுமார் 10 வருடங்களின் பின்னர் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மிக கோலாகலமாக அதிபர் கே.டி.ஹாரூன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரும், விஷேட அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம். றிகாஸ், புத்தளம் கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி. சுஜிவிகா சந்திரசேகர, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரூன், மஸ்ஜித் பரிபாலன சபைத்தலைவர் தலைவர் ஏ.எஸ்.எம். றஸீன்,தொழிலதிபர் எஸ். சாஜஹான் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு பாலித, ஆசிரிய ஆலோசகர்களான திரு சந்தன, திருமதி ஸ்ரீமதி, கிராம அதிகாரி எம்.எஸ்.எம். முஸப்பிர், தொழிலதிபர்களான எஸ்.சர்ஹான் மற்றும் எம்.பி.எம்.றிஷாட், அயல் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இல்ல விளையாட்டு நிகழ்வின் அனைத்து விடயங்களும் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


ஸபா, மினா,ஹிரா ஆகிய மூன்று இல்லங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டதில் ஹிரா இல்லம் முதலிடம் பெற்று சம்பியனாகியது.


பாடசாலை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள புதிய கட்டடமும் இதன்போது  திறந்து வைக்கப்பட்டது.  இக்கட்டடம் பெற்றோர் பழைய மாணவர்கள், ஊர் பிரமுகர்களால் மிக குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.


பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال