JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னார் தெற்கு கடலில் ஹஷிஷ் போதைப்பொருளை கடத்திய டிங்கி படகுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கைது செய்த கடற்படை

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படை, ”முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) பொதிகளை கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் (01)  ஒரு டிங்கி படகும் சனிக்கிழமை (14)  கடற்படையினறால் கைப்பற்றப்பட்டது.


கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகு, போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) பொதிகள் மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் மன்னார் தல்பாடு இறங்குத்துறைக்கு கொண்டு வரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய நிபுணத்துவ பரிசோதனையின் போது, படகில் இருந்த இரண்டு (02) பொதிகளில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


 இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட (01) டிங்கி , 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال