Breaking News

புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் (புட்வா) விஷேட ஒன்று கூடல் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன் 

புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் (புட்வா) விஷேட ஒன்று கூடல் நிகழ்வு சனிக்கிழமை (14) இரவு புத்தளம் கிரேண்ட் மல்ஹாஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.


சங்கத்தின் தலைவரும், டெக்னோ குறூப் நிறைவேற்று பணிப்பாளருமான எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புட்வா அமைப்பின் நிர்வாகிகள், புத்தளம் நகரின் உயர் தொழில் துறை வல்லுனர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், பிரதி மேயர் நுஸ்கி நிஸார், மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன், புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன, புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹேஸ் பண்டார, புத்தளம் மாவட்ட செயலாளர் வை.இந்திக மஞ்சுள சில்வா, தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், புத்தளம் ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி உள்ளிட்ட உயர் தொழில் வல்லுனர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.


"ஒன்றிணைந்த வர்த்தகம் உயர்ந்த வளர்ச்சி" எனும் தொணிப்பொருளில் இந்நிகழ்வு அரங்கேறியது.


புத்தளத்தில் வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்தல், வியாபாரிகளின் உரிமைகளை மேலோங்க செய்தல் போன்ற இலக்குகளை முன்வைத்து இந்த விஷேட ஒன்று கூடல் இடம்பெற்றது.


இதுவரை காலமும் புத்தளம் வர்த்தக நலன்புரிச்சங்கம் நடந்து வந்த பாதை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக இளம் ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான எம்.எச்.எம்.முஹம்மது தெளிவு படுத்தினார்.


புத்தளம் மாநகர சபையின்ரபார்வையில் "ஒன்றிணைந்த வர்த்தகம் உயர்ந்த வளர்ச்சி" எனும் தலைப்பில்  புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உரையாற்றினார்.


நிகழ்வின் பிரதான உரையினை "ஒன்றிணைந்த வர்த்தகம் உயர்ந்த வளர்ச்சி" எனும் தலைப்பில் ஏ.சீ.எம்.நபீல் நிகழ்த்தினர்.


தொழில் வல்லுநர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் புட்வாவினால் இதன்போது உள்வாங்கப்பட்டன.


நன்றி உரையினை புட்வா உப தலைவர் எம்.ஐ.எம்.இஹ்ஸாஸ் நிகழ்த்தினார்.


நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் "புத்தளம் மரைக்கார்" தொகுத்து வழங்கியதோடு ஏ.எம்.ஹிஸாம் ஹுசைன் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றினார்.
























No comments